பலருக்கு, ஒரு கப் தேநீர் அருந்துவது மிகவும் முக்கியமானது. இன்னும் சிலருக்கு, டீ பேக் தேர்வு செய்வது முக்கியம், இன்னும் சிலருக்கு கச்சிதமாக ப்ரியூ (நன்கு ஊறிய) மசாலா தேநீர் தான் பிடிக்கும்!மசாலா பொருள்களைச் சேர்த்தோ அல்லது அவ்வப்போது கொதிக்க வைப்பதன் மூலமாகவோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் தேநீரின் சுவையை மாற்றிக்கொள்ளலாம். பின்வருபவற்றைச் சேர்ப்பதன் மூலம் தேநீரை ஆரோக்கியமான பானமாக்கலாம்:
இஞ்சி, எலுமிச்சை, தேன் மற்றும் துளசி (Ginger, Lemon, Honey and Tulsi)
இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் வானிலையால் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், அதற்கும் இவை உதவும்.
செய்முறை: நசுக்கிய சில இஞ்சித் துண்டுகளையும், ஒரு கைப்பிடி துளசி இலைகளையும் (வழிபடும் துளசி) கொதிக்கும் நீரில் போடவும்.அதில் தேயிலை சேர்த்து, நீரை நன்கு கொதிக்க விடவும். தேநீர் அருந்தும் கோப்பையில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் ஒரு டீஸ்பூன் தேனையும் சேர்க்கவும். கொதிக்கும் தேநீரை கோப்பையில் ஊற்றவும்.
டெர்மினாலியா அர்ஜுனா பவுடர் (Terminalia arjuna Powder)
தேயிலைக்குள் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன, இவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. அர்ஜுனா பவுடரும் இந்தப் பண்புகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
செய்முறை: தேயிலை நீரில் கொதிக்கும்போது, ஒரு சிட்டிகை அர்ஜுனா பவுடரை சேர்க்கவும்.
இலவங்கப்பட்டை மற்றும் துளசி இலைகள் (Cinnamon and Tulsi Leaves)
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது நல்லது.
செய்முறை: நீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியைச் சேர்க்கவும், அத்துடன் சில துளசி இலைகளையும் தேயிலைகளையும் சேர்க்கவும்.சுமார் 10 நிமிடங்களுக்கு நீரைக் கொதிக்க விட்டால், உங்கள் ஆரோக்கிய தேநீர் தயாராகிவிடும்.
பால், கருப்பு ஏலக்காய்ப் பொடி, இஞ்சி மற்றும் பச்சை ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும் (Milk, Black Cardamom Powder, Ginger and Green Cardamom Powder)
மழை நாட்களில் அருந்த மிகவும் ஏற்ற, சுவையான மசாலா தேநீரைத் தயாரிக்க பல வழிகள் உள்ளன:
செய்முறை: பாலையும் நீரையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.அதில் தேயிலை, சர்க்கரை ஒரு டீஸ்பூன், ஏலக்காய் பொடிகள், இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். இது பாதியாகக் குறையும் வரை நன்கு கொதிக்க விடவும். இதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளுங்கள், மசாலா தேநீர் தயார்!
புதினாவும் எலுமிச்சையும் (Mint and Lemon)
புலன்களுக்குப் புத்துணர்ச்சியளிக்க புதினா மிகவும் சிறந்தது, ஜலதோஷம், தொண்டைப்புண் போன்றவற்றுக்கு மிகவும் சிறந்தது. எலுமிச்சை உங்கள் ஆற்றலை அதிகரித்து, செரிமானத்திற்கும் உதவுகிறது.
செய்முறை: நீரைக் கொதிக்க வைத்து, சிறிதளவு தேயிலைப் பொடியைச் சேர்க்கவும்.ஒரு டம்ளரில், புதினா இலைகளைப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் ஊற்றவும். கொதிக்க வைத்த தேநீரை இதில் வடிகட்டிச் சேர்க்கவும். வேண்டுமென்றால் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் நாம் அருந்தும் சாதாரண தேநீரை ஆரோக்கியத்தையும் அளிக்கின்ற நல்ல பானமாக மாற்றுவது எப்படி என்று தெயர்ந்துகொண்டீர்கள்! உங்கள் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப எது வேண்டுமோ அதைத் தயார் செய்து அருந்தி மகிழுங்கள்! சில மூலிகைகளையும் சில மசாலா பொருள்களையும் சேர்ப்பதன் மூலம் அதனை மருத்துவப் பயனுள்ள பானமாக மாற்றிக்கொள்ளுங்கள், அவை இருமல், ஜலதோஷம், செரிமானப் பிரச்சனை என இன்னும் பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக