Like us on Facebook

சனி, 11 மார்ச், 2017

உடலுக்கு குளிர்ச்சியான வெந்தய குழம்பு


உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இத்தகைய வெந்தயக் குழம்பு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1
புளி - 1
எலுமிச்சை - 1 சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
எண்ணெய் -1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் புளியை நீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு, புளிக்கரைசல் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் சிறு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான வெந்தய குழம்பு ரெடி!" - உடலுக்கு குளிர்ச்சியான வெந்தய குழம்பு


முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?...இதுதான் காரணம்





முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பருவில் வெள்ளையாக உள்ள உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த பரு மிகவும் தீவிரமாக பெரிதாகிவிடும்.
Advertisement:Replay Ad

Ads by ZINC
3
பிம்பிளைக் கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த பிம்பிளைச் சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.
அசுத்தமான கையால் பருக்களைத் தொடும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
பருவைக் கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த பிம்பிள் மறையும் போது நீங்காத தழும்புகள் உண்டாகும்.
பருக்களை கையால் தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாகவே மறையத் தொடங்கிவிடும்" - முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?... இதுதான் காரணம்...


செயற்கை இனிப்புகளால் உண்டாகும் விளைவுகள்



வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதே உடலுக்குக் கெடுதல் என்று கூறப்படுகிறது. அதிலும் இப்போதெல்லாம் சர்க்கரைப் பதிலாக வேறு சில ஸ்வீட்னர்களைப் பயன்படுத்துகிறோம். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்று தெரியுமா உங்களுக்கு?
செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதால் ஏராளமான உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன.

செயற்கை இனிப்புக்ள அதிகம் எடுத்துக் கொண்டால் வாயுது்தொல்லை உண்டாவதோ டயேரியா போன்ற பிரச்னைகளையும் உண்டாக்கிவிடும்.
செயற்கை இனிப்புகள் சாப்பிடுவது நாம் வழக்கமாக சாப்பிடும் உணவின் அளவை விடவும் அதிகமாக சாப்பிடும் பழக்கம் அதிகரிக்கும். அது உடல் பருமனை உண்டாக்கும்.
செயற்கை இனிப்புகளால் மரபணுக்களில் மாற்றங்கள் உண்டாகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதனால் செயற்கை இனிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, இயற்கை இனிப்புகளான தேன், பட்டைப் பொடி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்." - செயற்கை இனிப்புகளால் உண்டாகும் விளைவுகள்