Like us on Facebook

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

உடலுறவு பற்றிய இந்த கட்டுக்கதைகள் உங்களுக்கு தெரியுமா?

உடலுறவு என்று வரும் போது இருவேறு பாலினருக்கும் இடையே உள்ள எதிர்பார்ப்புகள், ஆசைகள், கருத்துக்கள் என அனைத்தும் வேறுபடுகிறது. ஒருவரின் தேவையை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை ஒன்று உருவாகிறது. இதனால் பலருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகிறது.
இன்றைய சூழ்நிலையில் பலரும் உடலுறவில் ஈடுபாடு குறைந்துவிட்டது என்ற கருத்தை முன் வைக்கின்றனர். நல்ல ஒரு கணவன் மனைவி உறவுக்கு உடலுறவும் ஒரு முக்கியகூறாக இருக்கிறது. பாலியல் பற்றிய சில கட்டுக்கதைகள் ஆண்களின் மீது உடலுறவில் ஏற்படுத்தும் தாக்கத்தை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்..!


எப்போதும் தயாராக இருப்பது:
ஆண்கள் உடலுறவுக்கு பெரும்பாலும் அனைத்து நேரங்களிலும் தயாராக இருக்கின்றனர் என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆண்கள் தயாராக உள்ள நேரத்தில், பெண்கள் உடலுறவுக்கு நோ சொல்லும் போது எல்லாம் ஆண்கள் மனதில் உடலுறவு ஆசை குறைந்து விடுகிறது.
பெண்கள் என்ன நினைக்கிறார்கள்:
ஆண்கள் எந்த நேரமும் உடலுறவுக்கு தயாராக இருக்கும் போது, பெண்கள் மனதில் இவரது குணமே இப்படியா? ஏதேனும் உடலுறவு சம்பந்தப்பட்ட பாதிப்பா? என்ன இது எப்போது பார்த்தாலும் இதே வேலையாக இருக்கிறார் போன்ற எண்ணங்கள் எழலாம்.


இது வேண்டாமே:
ஆண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராகவும் நேரத்தை விட, பெண்கள் மனதளவில் உடலுறவுக்கு தயாராக வெகுநேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை புரிந்து கொள்ளாமல், உங்களது துணை உடலுறவுக்கு தயாராகும் முன்னரே அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது கூடாது.
வேறுபட்ட எண்ணம்:
ஆண்களை பொருத்தவரையில் உடலுறவு என்றால் அதற்கு உடலுறவு என்ற அர்த்தம் மட்டும் தான். மற்ற பிற உணர்வுகள் இதனுடன் சேராது..! ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை..! உடலுறவு என்றால் காதல், அன்பு என பலவும் அடங்கும். உணர்வு பூர்வமான உடலுறவுக்கு ஆண்கள் பழக்கப்பட வேண்டும். பெண்கள் உடலுறவுக்கு முன்னர் அதீத காதலை தன் துணையிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.


உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி:
ஆண்கள் தங்களது மனதில் உள்ள காதல் போன்ற உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. மனதில் காதல் இருந்தாலும் கூட அதனை பெண்கள் அளவிற்கு ஆண்களால் வெளிப்படுத்த முடிவதில்லை. தன் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக உடலுறவு அமைகிறது.
அதிக உடலுறவு:
உடலுறவுக்கு அடிமையாதல் மிகவும் கொடியது. உடலுறவு தேவை அதிகரிப்பதால் பல உறவுகள் பிரிந்து விடுகின்றன. இது ஆண், பெண் என இருபாலருக்கும் தீங்கானது. இது பிறரிடம் உங்களை தவறானவராக கூட வெளிப்படுத்தும். எனவே உங்களுக்கு உடலுறவு பற்றிய அதீத சிந்தனைகள் இருந்தால், அதனை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சு தான்…!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக