கோரைப் என்றால், இன்றைய தலைமுறை மக்களுக்கு என்னவென்று கூட தெரியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
ஆனால் இன்றும் கிராமங்களில், கோரைப்பாயை பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்கையில் நம்மவர்கள் மட்டுமின்றி நம் குழந்தைகளும் படுக்கைக்கு, பல விதங்களில் உருவாக்கப்பட்ட பெட் பயன்படுத்துகிறோம். அது பிளாஸ்டிக்பாயாக இருந்தால், விரைவில் நம் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
நாம் பயன்படுத்தும் அந்த படுக்கையில், நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் பல பொருள்கள் உள்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நம் உடல்நலம் பல வகையில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
சரி, அப்படியென்றால் கூரைப்பாயை பயன்படுத்தும் போது நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
உடல் சூற்றை தணிக்கக்கூடியது
கோரைப்பாய் என்பது ஆற்றின் ஓரப்பகுதியில் நன்கு நீண்டு வளரக் கூடிய ஒரு வகையான புல் ஆகும். மேலும் ஆற்றின் ஓரம், நல்ல நீர்பிடிப்பு பகுதியில் வளர்வதால், உறங்குவதற்கு நல்ல ஒரு இன்பத்தை தரும்
காய்ச்சல் நேரத்தில் நம் உடல் மேலும் சூடாகமல் இருக்க கோரைப்பாயை பயன்படுத்தலாம்.
அதாவது காய்ச்சல் நேரத்தில் இந்த பாயில் படுத்து உறங்குவதால், நம் உடலில் உள்ள வெப்பத்தை வெகுவாக குறைக்கும்
மேலும் கொசு உள்ளிட்ட எந்த பூச்சிக்களும், நம்மை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது
இத்தகைய பயனுள்ள கோரைப்பாயை பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் பாய் பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக