Like us on Facebook

திங்கள், 14 நவம்பர், 2016

500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

💰 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர; 9 லிருந்து வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 500 மற்றும் 1000 ரூபாய்களை நோட்டுகளை முறையாக மாற்றுவதற்கான வழிமுறைகளை ரிசர;வ் வங்கி அறிவித்துள்ளது.

எதற்கு இந்த மாற்றம்?
💰 நம் நாட்டில் கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வழிமுறைகள் என்ன ?

💸 பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர; 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து அதற்கு நிகரான 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

💸 பணப் தட்டுப்பாட்டால் தற்போதைய சு+ழ்நிலையில் தனி ஒரு நபர; ரூ.4,000 மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

💸 தற்போதைய நிலையில், முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதி கொடுக்கவில்லை.

💸 உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங் மூலம் பணப் பரிவர;த்தனைகளை செய்து கொள்ளலாம்.

💸 வங்கிகளுக்கு நேரடியாக செல்ல இயலாதவர;கள் அத்தாட்சிக் கடிதத்துடன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கலாம்.

💸 ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர;, வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

எங்கு ? எப்படி ?

💸 ரிசர;வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

💸 நவம்பர் 24-ம் தேதி வரை பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 4 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

💸 அதற்கு மேல் உள்ள தொகையை அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.4000-க்கு மேலான தொகையை மாற்றிக் கொள்ள, அவர;களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்

💸 நவம்பர; 10-ம் தேதி முதல் டிசம்பர; 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலக கணக்குகளில் மாற்றலாம். இந்தக் கால அவகாசத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

💸 வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். யுவுஆ-கள் இயங்க தொடங்கி சில நாட்களுக்கு ஒரு அட்டைக்கு 2 ஆயிரம் ரூபாய், வாரத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம். இத்தொகை பின்னர; படிப்படியாக அதிகரிக்கப்படும்.

💸 காசோலை, வரைவோலை, கிரெடிட் மற்றும் டெபிட் கார;டுகள், நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர; ஆகிய பரிமாற்றத்தில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

💸 அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் நிலையம், விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்கள், ரயில் டிக்கெட் நிலையங்கள், அரசு பேருந்து மையம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்கள் ஆகியவற்றில் நவம்பர; 11-ம் தேதி வரை 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒன்றிணைவோம் !

கறுப்புப் பணத்தை ஒழிப்போம் !!!


புதன், 9 நவம்பர், 2016

முருகனின் வேறு கோலங்கள்!

முருகனின் வேறு கோலங்கள்!



🌟 “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்;. தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள், முருக வழிபாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.

🌟 வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! முருகன் இருக்க துன்பமில்லை! முருகன் என்று சொன்னால் நினைவுக்கு வருவது மயிலும், வேலும் தான். இந்த கோலம் தவிர முருகனுக்கு வேறு சில கோலங்களும் உள்ளது அதைப் பற்றிப் பார்ப்போம்.

🌀 திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், மூல ஸ்தானத்தில் முருகன் வில்லேந்தியபடி வள்ளி தெய்வானை உடனிருக்க அருள்கிறார்.

🌀 ஆறுமுகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனியே மயில் மீது காட்சி தரும் திருத்தலம் திருச்சி அருகே உள்ள திண்ணியம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

🌀 குடந்தை அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் தூண் சிற்பமாக, வேல் ஏந்திய முருகன் மயில் மீது கால் வைத்து நிற்கிறார்.

🌀 சென்னிமலை கோவிலில் குடிக்கொண்டிருக்கும் 'அக்னி ஜாத சுப்பிரமணியர்" இரண்டு தலைகளுடனும், 'சௌரபேய சுப்பிரமணியர்" நான்கு தலைகளுடனும் காட்சி அளிக்கிறார்.

🌀 மதுராந்தகம் பக்கமுள்ள குமார வாடி தலத்திலுள்ள கோவிலில், முருகப் பெருமான் யோக நிலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

🌀 பு+ம்புகார் அருகில் உள்ள சாயா வனம் எனும் தேவாரப் பாடல் பெற்ற பதியில், மூன்றடி உயரத்தில் வில் ஏந்திய முருகன் சிலை உள்ளது.

🌀 மலையைக் குடைந்து வடிக்கப் பெற்ற முருக வேலையும், தேவ குஞ்சரியையும் திருப்பரங்குன்றத்தில் தரிசிக்கலாம்.

🌀 கர்நாடகத்தில் உள்ள 'சுப்ரமணியர்" திருத்தலத்தில் முருகன் புற்று வடிவமாய் காட்சியளிக்கிறார்.

🌀 கரூர் அருகே உள்ள வெண்ணெய் மலை எனும் தலத்தில் வேல், மயில், வள்ளி-தெய்வானை இல்லாமல் தனியாகக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்.

🌀 மூன்று தலைகளையும், ஆறு கரங்களையும் உடைய முருகனை ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிப்பாளையத்தில் காணலாம்.

🌀 திருச்செந்தூரில் திருவிழா நாட்களில் முருகப் பெருமான், வில்லும் அம்பும், வேலும் வஜ்ராயுதமும் நான்கு கரங்களில் ஏந்திய வண்ணம் வீதி உலா வருகிறார். சங்கு சக்கர முருகன் தனது மாமன் திருமாலைப் போலவே, வலக்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் தாங்கியவராக ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்துள்ள காட்சி வேறெங்கும் காணமுடியாத அபு+ர்வக் காட்சியாகும்.

ஆன்மீக தகவல்கள் :

🌠 திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பு+சிக்கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.

🌠 அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பு+சிக்கொள்ள கூடாது.

🌠 பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.


கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?



🌷 மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

🌷 ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரசாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது.

🌷 பின்பு பெண்கள் கோவிலில் கொடுக்கும் மலர்களை வாங்கி கண்களில் பற்றி கொண்டு பின்னர் தலையில் வைப்பது மிகவும் நல்லது. ஆலயத்தின் வெளியே வந்து தான் மலர்களை பெண்கள் தலையில் சு+ட வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

🌷 ரூபாய் நோட்டுக்கும் வெறும் தாளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ரூபாய் நோட்டுக்களில் அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. அது போன்று ஒவ்வொரு கடவுளின் பிரசாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும்.

🌷 பிறகு வீட்டில் பு+ஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது மலர்களை வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்கு கோவிலில் கொடுக்கும் மலர்களை சாற்றுதல் கூடாது.


ஐயப்பனின் வேறு பெயர்கள்

ஐயப்பனின் வேறு பெயர்கள்

  சாமியே சரணம் ! ஐயப்பா சரணம் ! என்று சரண கோஷமிட்டு சபரி மலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.

  18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்ததிருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

🌟 மணிகண்டன்.

🌟 பு+தநாதன்.

🌟 பு+லோகநாதன்.

🌟 தர்மசாஸ்தா எருமேலிவாசன்.

🌟 ஹரிஹரசுதன்.

🌟 ஹரிஹரன்.

🌟 கலியுகவரதன்.

🌟 கருணாசாகர்.

🌟 லக்ஷ்மண பிராணதத்தா.

🌟 பந்தளவாசன்.

🌟 பம்பாவாசன்.

🌟 ராஜசேகரன்.

🌟 சபரி.

🌟 சபரீஷ்.

🌟 சபரீஷ்வரன்.

🌟 சபரி கிரீஷ்.

🌟 சாஸ்தா.

🌟 வீரமணி.

  இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும். கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரி கிரி நாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.


ஏழு மலையானின் பெயர் காரணங்கள்!

ஏழு மலையானின் பெயர் காரணங்கள்!



 திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

ஒன்றாம் மலை :

🌟 'வேம்" என்றால் பாவம், 'கட" என்றால் 'நாசமடைதல்". பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு 'வேங்கட மலை" என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

இரண்டாம் மலை :

🌟 பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் 'சேஷமலை" என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் மலை :

🌟 வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பு+ஜித்தன. எனவே இது 'வேத மலை" என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் மலை :

🌟 சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை 'கருட மலை" எனப் பெயர் பெற்றது.

ஐந்தாம் மலை :

🌟 விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு 'விருஷப மலை" எனப் பெயர் வந்தது.

ஆறாம் மலை :

🌟 ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சன மலை" எனப்படுகிறது.

ஏழாம் மலை :

🌟 ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு 'ஆனந்த மலை" என்று பெயர் வந்தது. இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஏழுமலையான் என்று பெயர் வந்தது.


செவ்வாய், 8 நவம்பர், 2016

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை : இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது


பதிவு செய்த நேரம்:2016-11-08 20:05:21


புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார்.

இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது

நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். யைமங்கள் வேலை செய்யாது

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு

பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது