Like us on Facebook

வியாழன், 2 நவம்பர், 2017

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான் என்பது முன்னோர் வாக்கு. ஆம், வெற்றியாளர்கள் பலரை உற்று நோக்கிப் பாருங்கள் எல்லோருமே அதிகாலை எழுபவர்களாகத் தான் இருப்பார்கள். அதிகாலையில் தான் தெளிவான பல சிந்தனைகள் பிறக்கிறது. எனவே அந்த நாளுக்கான எல்லா திட்டமிடல்களும் அந்த வேளையில் செய்து விட முடியும். மேலும் அதிக நேரம் கிடைப்பதால் அன்றைய நாளின் செயல்களை அதிக பதட்டம் இன்றியும் செய்ய முடியும். எனவே தான் நமது முன்னோர்கள் அதிகாலை எழுவதை வலியுறுத்தினார்கள். உஷத் காலம் எனப்படும் இந்த பொழுதில் எழுந்ததும் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.


1. எழுந்த உடனே இறைவனை எண்ணி தியானிப்பது நல்லது. ஒரு நம்பிக்கை நமக்குள் பிறக்கும்.
2. பசுமையான அல்லது மங்களகரமான பொருட்களைப் பார்த்தவாறு எழுவது அன்றைய நாளை மகிழ்ச்சியாக வைத்திருக்க செய்யும். வண்ண சிகிச்சை முறை பசுமையானவற்றை அதிகாலையில் பார்ப்பது கண்ணுக்கு நல்லது என்கிறது. குறைவான ஒளியில் கண்விழிப்பதும் அவசியம்.
3. சிலர் உள்ளங்கையை தேய்த்து கண்ணில் ஒற்றியவாறு எழுவார்கள். இதுவும் நல்லதே கைகளை உரசுவது ஓய்வில் இருந்த உடலுக்கு இயக்க சக்தியை அளிக்க உதவும். அதிகாலையில் வீசும் தூய காற்று நல்லவை. எனவே வெளிப்புற காற்றை சுவாசிப்பதும், உடலில் படுமாறு நிற்பதும் அவசியமானது.
4. படுக்கையை விட்டு எழுந்து நின்று, தரையை தொட்டு வணங்குவது சிலரின் வழக்கம். அன்றைய நாள் முழுவதும் பூமியை மிதித்து நடக்க போகிறேன் அதற்காக பூமி அன்னை தன்னை மன்னிக்க வேண்டும் என்பதற்கான வேண்டுதல் இது. ஆனால் இது ஒரு வகை யோகாசனம் தான். இதைச் செய்வதால் பூமாதேவியை வணங்கியது போலவும் இருக்கும், உடலின் ரத்தம் தலைக்குப் பாய்ந்து மூளை சுறுசுறுப்படையவும் செய்யும்.
5. நீர் அருந்தி வயிற்றை சுத்தமாக்கிய பிறகு புதிய பாடல்களை அல்லது பாடங்களை மனனம் செய்வது நல்லது. அமைதியான அந்த சூழலில் படிக்கும் எதுவுமே எளிதாக நினைவில் நிற்கும்.
6. குளித்து முடித்தபிறகு பூஜை செய்வது நல்லது. பூஜையில் இருக்கும் தூய தீபங்கள், மலர்கள் போன்றவற்றின் நறுமணம் நம்மை உற்சாகமடைய வைக்கும். ஆரோக்கியத்தை அளிக்கும்.
7. நடைப்பயிற்சி, யோகா, தியானம், உடற்பயிற்சி என ஏதாவது ஒன்று 20 நிமிடங்கள் வரை செய்வது கட்டாயமாக இருக்க வேண்டும். இது பல நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
8. எடுத்த உடனே காலை உணவை உண்ணாமல் பாலோ, பழச்சாறோ எடுத்துக்கொள்வது உடல் நலனுக்கு சிறந்தது.
9. வைகறையில் சூரியனிடம் இருந்து நம்மை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி மிக்கவை. பல தாது சத்துகள் கொண்டவை. எனவே சூரியனை தரிசிக்கும் நோக்கில் சூரியக் குளியலையும் எடுத்துக்கொள்ளலாம்.
10. அமைதியான அந்த நேரத்தில் அன்றைய நாளுக்கான பணிகளின் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அந்த செயல்கள் சிரமமின்றி நடைபெற தங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் ஸ்லோகங்களை பாடலாம் அல்லது கேட்கலாம்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக