Like us on Facebook

வியாழன், 28 செப்டம்பர், 2017

சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்


சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்


கொச்சி: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஆண் ஊழியர்கள், சபரிமலையில், ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.சபரிமலையில் சீசன் காலத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே தேவசம் போர்டு கடந்த செப்., 16ம் தேதி வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில், ' தேவசம் போர்டின் நான்காம் நிலை ஊழியர்களில் இருந்து துணை கமிஷனர் வரையும், தேவசம் போர்டு கீழ் வரும் பொதுப்பணித்துறையில் கீழ் நிலை ஊழியர் முதல் நிர்வாக இன்ஜினியர் வரை, சபரிமலையில் ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

பணி பெயரேட்டில் அவ்வாறு பணியாற்றியதை குறிப்பிட வேண்டும். இந்த நடைமுறை இன்னும் ஒன்றரை மாதத்தில் துவங்க உள்ள சபரிமலை சீசனில் இருந்து அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தேசவம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் இதை மறுத்துள்ளார். ஊழியர்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஊழியர்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் சபரிமலையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார். 

Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக