Like us on Facebook

திங்கள், 20 அக்டோபர், 2014

சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு

சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 

புதுடெல்லி, அக்.10- பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர மேல் முறையீடு தொடர்பாகவும், தனிக்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் விடுமுறைகால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி ரத்தினகலா விசாரணையை தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி கடந்த 1-ந் தேதி நீதிபதி ரத்தினகலா உத்தரவிட்டார். அதன்படி, தசரா விடுமுறைக்கு பின் 7-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும், ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி சந்திரசேகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து விட்டதால், ஜெயலலிதா சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். முதலில் ஜெயலலிதா மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள். எனவே நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை. தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனிக்கோர்ட்டு தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் என்னுடைய ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஜாமீன் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்து இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல; சாதாரண தண்டனைதான். இதற்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை ஐகோர்ட்டு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. தனது ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இன்றே (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா

னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டு முன் குவிந்த தொண்டர்கள் பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 12:38 PM IST கருத்துக்கள்1வாசிக்கப்பட்டது29 பிரதி சென்னை, அக். 19– பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் விடுதலையான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை திரும்பினார். பெங்களூரில் வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது போல் சென்னையிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். மாலை 4.50 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் போயஸ்கார்டன் புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரின் முன் இருக்கையில் ஜெயலலிதா உட்கார்ந்து இருந்தார். பின் இருக்கையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். ஜெயலலிதாவின் காரை தொடர்ந்து ஏராளமான கார்கள் அணிவகுத்து வந்தது. ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து ரோட்டின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் காத்து நின்று பார்த்தனர். ஜெயலலிதா கார் அருகே வந்ததும் உற்சாக மிகுதியால் துள்ளிக் குதித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அம்மா அம்மா என்று விண்ணதிர முழக்கமிட்டனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேள தாளம் முழங்கியும், ஜெயலலிதாவின் கார்மீது பூ மழை தூவியும் வரவேற்றனர். கொட்டும் மழையிலும் வழிநெடுக தொண்டர்கள் நின்று வரவேற்பு கொடுத்தனர். ஜெயலலிதாவும் இரண்டு விரல்களை காட்டி கையை அசைத்தபடி சென்றார். தொண்டர்களின் உற்சாகத்தால் ஜெயலலிதா கார் மெதுவாகவே வந்தது. மீனம்பாக்கம், கத்திப்பாரா, கிண்டி, சின்னமலை, கவர்னர் மாளிகை ரோடு, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக கோட்டூர்புரம் பாதையில் சென்றபோது ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் அருகே காரை நிறுத்தி ஜெயலலிதா விநாயகரை வணங்கினார். அதைத் தொடர்ந்து அடையார் பார்க் ஓட்டல், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாக போயஸ் கார்டன் சென்றார். போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமான தொண்டர்களும், மகளிர் அணியினரும் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். மாலை 6 மணிக்கு ஜெயலலிதா அவரது இல்லத்துக்கு சென்றார். அதன் பிறகு தொண்டர்கள் கலைந்து சென்றனர். ஜெயலலிதாவுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டது. ஜெயலலிதா போயஸ் கார்டனுக்கு வந்து விட்டதால் அவரை பார்க்கும் ஆவலில் இன்றும் வெளியூர் தொண்டர்கள் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டனர். ஏராளமான மகளிர் அணியினர் கொட்டும் மழையிலும் போயஸ் கார்டன் பகுதியில் திரண்டு நின்றனர். "இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்" CLOSE அண்மை - சென்னை சென்னையில் தொடரும் கனமழை: 20 இடங்களில் மரங்கள் சாய்ந்தன சென்னை, அக். 19–வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் ....» மேலும் சென்னை செய்திகள் மேலும் கொட்டும் மழையிலும் சூடுபிடித்த தீபாவளி வியாபாரம்: வியாபாரிகள் மகிழ்ச்சி ஜனவரியில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் .... தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களாக நீடிக்கும் மழை: எக்ஸ்பிரஸ் .... பரப்பன அக்ரஹாரா முதல் போயஸ் கார்டன் வரை... சென்னையில் 2-வது நாளாக தொடர்மழை: போலீஸ் கமிஷனர் அலுவலக .... போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார் ஜெயலலிதா: அமைச்சர்கள்-தொண்டர்கள் உற்சாக .... விடிய விடிய மழை: குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் .... கருத்துக்கள்1வாசிக்கப்பட்டது29 பிரதி Rajesh's Next Is Not A Se ... Rajesh's Next Is Not A Sequel To Boss Engira Bhaskaran செய்திகள்சினிமாஆன்மிகம்ஆரோக்கியம்வீடியோ தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் வீடியோ காலச் சுவடுகள் விமர்சனம் முன்னோட்டம் சினிமா செய்திகள் கிசுகிசு காட்சியகம் சினி வரலாறு நட்சத்திர பக்கம் திரைப்படங்கள் சினிமா 2013 முக்கிய விரதங்கள் ஜோதிடம் கோவில்கள் ஸ்லோகங்கள் தோஷ பரிகாரங்கள் வழிபாடு இந்த வார விசேஷங்கள் ஆடி மாத வழிபாடுகள் உடற்பயிற்சி ஆரோக்கிய சமையல் இயற்கை அழகு பொது மருத்துவம் பெண்கள் மருத்துவம் பெண்கள் பாதுகாப்பு மூலிகை மருத்துவம் டிரைலர்கள் சினி நிகழ்வுகள் சிறப்பு வீடியோ சினிமினி கோலிவுட் கபே சென்னை 19-10-2014 (ஞாயிற்றுக்கிழமை) தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள் வலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய காப்புரிமை 2014, © Malar Publications Ltd. | Powered by VPF

சிக்கல் இன்னும் முடியவில்லை

சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி     

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை. எனவேதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது. தண்டனைக்கும் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கிறது. அவர் வீட்டை விட்டு எங்கும் போக கூடாது. கட்சிக்காரர்களை சந்திக்ககூடாது. அரசியல் செய்ய கூடாது. மேல் முறையீட்டில் வாய்தா வாங்கக்கூடாது. டிசம்பர் 18-ம் தேதிக்குள் வழக்கை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் தாமதித்தால் கூட ஜாமீன் தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள். இந்த ஜாமீன் காலத்தில் சுப்பிரமணியன் சுவாமியையோ, நீதிபதியையோ அசிங்கமாக பேசக்கூடாது. கார்ட்டூன் போடக் கூடாது. வீடு மீதோ, ஆட்கள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது. மீறி ஏதாவது நடந்தால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் இல்லாமல் போய்விடும் என நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள். அவருடைய கட்சிக்காரர்கள் வ‌ன்முறையில் ஈடுபடக் கூடாது. அதனை ஜெயலலிதா தடுக்க வேண்டும். நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அருவருப்பாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கை கெடுத்தால் அவருக்குத்தான் பிரச்சினையாக முடியும். 35 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங் களை மொழிபெயர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மேல் முறையீட்டில் தேவைப்பட்டால் நான் ஆஜராவேன். அங்கு ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தவோ, அல்லது விடுதலை ஆகவோ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் நான்காண்டு சிறை தண்டனை ஏழாண்டாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது''என்றார். ட்விட்டரில் விமர்சனம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் அதிமுகவினரை பொறுக்கிகள் என குறிப்பிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சனி, 11 அக்டோபர், 2014



சனி, 4 அக்டோபர், 2014

ஜெயலலிதா -தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி

மாற்றம்: தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 03, 10:59 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது30 பிரதி புதுடெல்லி, அக். 3– ரூ. 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். பெண்களுக்குரிய சிறைப் பகுதியில் அறை எண். 23–ல் வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். 27–ந்தேதி அந்த அறைக்கு சென்ற அவர் யாரிடமும் பேச விரும்பாமல் உள்ளார். உடனடியாக ஜாமீன் கிடைக்காததால் அவர் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் அவருக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று உணவு வழங்கப்பட்டது. ஆனால் அதை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதனால் அவருக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது. தனிமை சிறையில் உள்ள ஜெயலலிதா பெரும்பாலும் இளநீரை வாங்கி குடிக்கிறார். மேலும் பால், ரொட்டி வகைகளை அவருக்கு கொடுக்கிறார்கள். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை 12க்கு 18 அடி கொண்டு சிறிய அறையாகும். அது ஜெயலலிதாவுக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது. ஜெயலலிதா பயன்படுத்தும் பொருட்களை அங்கு வைக்க இட வசதி போது மானதாக இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று சிறைத்துறை அதிகாரிகளிடம் தனக்கு வேறு அறை ஒதுக்கீடு செய்து தருமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதை பரப்பன அக்ரஹாரா சிறைத் துறை உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் பெண்கள் வளாகப் பகுதியில் முதல் மாடியில் ஒரு அறைக்கு நேற்று ஜெயலலிதா மாற்றப்பட்டார். இந்த அறை ஏற்கனவே இருந்த அறையை விட சற்று விசாலமானது. இந்த அறை ஜெயலலிதாவுக்கு திருப்தி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் தமிழ் டி.வி. சானல் நிகழ்ச்சிகள் பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 7–வது நாளான இன்றும் ஜெயலலிதா அமைதியாக காணப்பட்டார். யாரிடமும் அவர் ஆர்வமாக பேசவில்லை. சிறை டாக்டர்களிடம் மட்டும் அவர் பேசினார். மற்ற நேரங்களில் அவர் டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்தார். இடையிடையே புத்தகங்கள் வாசித்து வருகிறார். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 7–ந்தேதி பெங்களூர் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இன்னும் 4 நாட்களுக்கு அவர் சிறையில்தான் இருக்க வேண்டும். நேற்று முதல் 6–ந்தேதி வரை அரசு விடுமுறை தினங்களாகும். இந்த 5 நாட்களும் சிறை விதிப்படி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் எண்ணிக்கை நேற்றும், இன்றும் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு ஜெயிலில் விதிகளுக்கு மாறாக எந்த வி.ஐ.பி.க்குரிய சலுகையும் காட்டவில்லை என்று சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்மா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:– ஜெயிலுக்குள் எல்லா கைதிகளையும் நடத்துவதை போலத்தான் ஜெயலலிதாவையும் நடத்துகிறோம். அவருக்கு எந்த விதி விலக்கும் கொடுக்க வில்லை. அவரும் எங்களிடம் சிறப்பு சலுகை எதுவுமே கேட்கவில்லை. டாக்டர்கள் கூறி இருப்பதால் இரும்பு கட்டில் தருமாறு என்ற ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே அவர் வைத்தார். அந்த வசதியை செய்து கொடுத்துள்ளோம். மற்றபடி அவர் டி.வி. கூட கேட்கவில்லை. சிறைக்குள் அவர் மிகவும் அமைதியாக உள்ளார். சிறைத்துறை அதிகாரிகளுடன் கண்ணியத்துடன் நடந்து கொள்கிறார். அவர் எங்களிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. அவர் குறைந்த கால தண்டனை கைதி என்பதால் அவர் சிறையில் கொடுக்கும் உடையைத்தான் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே அவர் தனது சொந்த உடைகளை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு தினமும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தினமும் சுறுசுறுப்பாக இருக்கிறார். காலையில் எல்லா நாளிதழ்களையும் படிக்கிறார். பிஸ்கட், பழ வகைகளை விரும்பி சாப்பிடுகிறார். இவ்வாறு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்மா கூறினார்.

தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி

தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி: நேற்றிரவு சாப்பிடவில்லை பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 11:17 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது27 பிரதி பெங்களூர், செப்.28– ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போதே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் என்ற தீர்ப்பை நீதிபதி குன்கா வாசித்தார். இதை கேட்டதும் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து நீதிபதி தீர்ப்பு விவரங்களை வாசித்தபோது ஜெயலலிதா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். தீர்ப்பு முழு விபரமும் வாசித்து முடிக்கப்பட்டதும் ஜெயலலிதாவை கர்நாடகா போலீசார் சிறைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை செய்தனர். அப்போது ஜெயலலிதாவின் இசட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சற்று மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா தனக்கு தலைசுற்றலாகவும், சற்று மயக்கமாகவும் இருப்பதாக கூறினார். மேலும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் ஜெயலலிதாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப நீதிபதி குன்கா மறுத்து விட்டார். ஜெயில் டாக்டர்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பேரில் ஜெயில் டாக்டர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். என்றாலும் ஜெயலலிதா, பெங்களூரில் உள்ள ஜெயதேவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படலாம் என்று இரவு 9 மணி வரை பரபரப்பு நிலவியது. இதற்கிடையே ஜெயலலிதா பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்று உறுதியான தகவல் வந்த பிறகே பரபரப்பு ஓய்ந்தது. பரப்பன அக்ரஹராவில் உள்ள மத்திய சிறையில் 5 வி.ஐ.பி. அறைகளும், 2 வி.வி.ஐ.பி. அறைகளும் உள்ளன. அதில் ‘‘செல் நம்பர் 23’’ என்ற வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவருக்கு கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ‘கைதி எண். 7402’ என்ற எண் கொடுக்கப்பட்டது. அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு படுக்கை, ஒரு மின்விசிறி மற்றும் அந்த அறையுடன் இணைந்த குளியல் அறை உள்ளது. நேற்றிரவு அந்த அறையில் ஜெயலலிதா தூங்கினார். ஜெயிலில் ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக 200 கிராம் அரிசி சாதம், 2 சப்பாத்தி, மற்றும் ராகி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த உணவை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். சில பழ வகைகள் மட்டும் தரும்படி அவர் கேட்டார். அதன்படி அவருக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை ஜெயலலிதா இரவு உணவாக சாப்பிட்டார். ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போர்வை மற்றும் தலையணைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் தனிமை அறையில் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் யாரிடமும் பேச வில்லை. பெங்களூரில் உள்ள இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் வி.வி.ஐ.பி. ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மீதானசொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை : நீதிபதி குன்கா

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம் பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 01, 1:22 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது30 பிரதி பெங்களூர், அக்.1- ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை. ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும். குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம். இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம். வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும். குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது. அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம். இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை. கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை. உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும். இவ்வாறு நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.