Like us on Facebook

செவ்வாய், 28 ஜூலை, 2015

திருமணம் குறித்து அப்துல் கலாம்

திருமணம் குறித்து அப்துல் கலாம் கருத்து கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 61 பிரதி மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 28,2015, 4:24 PM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 28,2015, 4:24 PM IST 1. கலாம் வீடு ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த பழைய வீட்டை படத்தில் காணலாம். 2. சிறு குழந்தையுடன் அப்துல் கலாம். 3. குழந்தைகளுடன் கலாம் மும்பையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அப்துல் கலாம். 4. அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் அப்துல் கலாம். அப்துல்கலாம், திருமணமாகாத, தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பரித்த பிரமச்சாரி என்பது எல்லோருக்கும் தெரியும். திருமணம் செய்து கொள்ளாததற்கு அவர் சொன்ன பதில்:- ’ ”திருமணம் குறித்து என்னை நோக்கி 50 ஆண்டுகளாக கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் என் திருமணத்தை பற்றி கேட்ட கேள்விகள் கணக்கில் அடங்காதவை. நான் ஒரு கூட்டு குடும்பத்தில் பிறந்தவன். எனது குடும்பம் பல தலைமுறையாக இருந்து கொண்டு இருக்கிறது. நிறைய வாரிசுகள் இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து ஒருவர் கல்யாணம் ஆகாமல் இருப்பது பெரிய கேள்விக்குரிய விஷயமில்லை”. என்று கூறினார். 5. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீணை வாசிப்பதிலும் கை தேர்ந்தவர். 6. கலாம் ரசனை ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில் பூக்களின் அழகை ரசித்தபடி அப்துல் கலாம் உலவிய காட்சி. 7. பேராசிரியருடன் கலாம் அப்துல்கலாம் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் மிகஉயர்ந்த பதவிகளில் இருந்தபோதிலும், தனது ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். கடந்த 18–ந்தேதி திண்டுக்கல் வந்த அவர், அங்கு தனது பேராசிரியர் சின்னதுரையை சந்தித்து பேசினார். அப்போது பேராசிரியரை கைத்தாங்கலாக கலாம் அழைத்துவந்த காட்சி. செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் நேசம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பாளர். அவருக்கு செருப்பு தைக்கும் தொழிலாளியும் தோழராக இருந்திருக்கிறார். திருவனந்தபுரம் அருகே காந்தாரியம்மன் கோவில் பகுதியில் செருப்பு தைப்பவர் ஜார்ஜ். அவரிடம் அப்துல்கலாம் நேசமுடன் பழகி வந்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை திருவனந்தபுரத்துக்கு அப்துல்கலாம் வந்தார். அப்போது அவருக்கு ஜார்ஜ் ஞாபகம் வந்தது. அவருடைய அங்க அடையாளங்களை கூறி, அவர் எங்கிருந்தாலும் உடனே அழைத்து வருமாறு டி.ஐ.ஜி. பத்மகுமாரிடம் அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார். உடனே போலீசார் அழுக்கு உடையுடன் இருந்த ஜார்ஜை தேடி கண்டுபிடித்து ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகும் தன்னை ஞாபகம் வைத்து அழைத்து வரும்படி கூறிய அப்துல் கலாமை பார்த்ததும் ஜார்ஜ் மனம் நெகிழ்ந்து போனார். அவரிடம் அப்துல்கலாம் கேட்ட முதல் கேள்வி: ’சாப்பிட்டீங்களா?’ என்பதுதான். தன்னுடன் பழகியவர்களிடம் எப்போதும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அப்துல் கலாம். மண்டேலாவுடன் கலாம் தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் அப்துல் கலாம். ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகலாயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். கலாம் பதவி ஏற்பு 25–7–2002 அன்று ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது எடுத்த படம். கலாம்–பி.முகர்ஜி - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் அப்துல் கலாம். 13. கலாம்–ஒபாமா கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, அப்துல் கலாம் சந்தித்த காட்சி. மோடி–கலாம் - பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்துல் கலாம். 15. சோனியாவுடன் கலாம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அப்துல் கலாம். 16. ஜெயலலிதாவுடன் கலாம் - முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் அப்துல் கலாம்.

மக்கள் ஜனாதிபதி

இந்தியர்களால், 'மக்கள் ஜனாதிபதி' என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, 'கனவு காணுங்கள்' என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு, மாரடைப்பால் காலமானார். முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், 84, வடகிழக்கு மாநிலமான, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனமான, ஐ.ஐ.எம்.,மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று மாலை துவங்கிய கருத்தரங்கில், மாணவர்களிடையே, கலாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மாலை, 6:30 மணிக்கு திடீரென, அவருக்கு வியர்த்து கொட்டியது; சோர்வடைந்த அவர், மேடையிலேயே மயங்கி விழுந்தார். பதறிய அதிகாரிகள், உடனடியாக அவரை, பெதானி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலர், வார்ஜிரி ஆகியோர், மருத்துவமனைக்கு விரைந்தனர்; ராணுவ டாக்டர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, அப்துல் கலாம் காலமானார். தலைமைச் செயலர் வார்ஜிரி கூறுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாரடைப்பால் காலமானார். அவரின் உடல், நாளை (இன்று) காலை, டில்லிக்கு எடுத்துச் செல்லப்படும்,'' என்றார். கலாமின் மறைவை அடுத்து, 'ஏழு நாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ஏவுகணை நாயகன்! நாட்டின், 11வது ஜனாதிபதியான அப்துல் கலாம், 2002 - 2007 வரை, அந்த பதவியை வகித்தார். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில், 1931ம் ஆண்டு, அக்டோபர், 15ல் பிறந்த அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம், பாரத் ரத்னா, பத்ம பூஷன் போன்ற விருதுகளை பெற்று, அந்த விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அணு சக்தி துறையுடன் இணைந்து, 'பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்தியதில், அப்துல் கலாமுக்கு முக்கிய பங்கு உண்டு. 'அக்னி, பிரித்வி' போன்ற ஏவுகணைகளின் தயாரிப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்து, 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டார். நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவகவுடா போன்றோர் பிரதமர்களாக இருந்தபோது, அவர்களின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக, மாணவர்களிடையே, 'கனவு காணுங்கள்; அது, உங்கள் உயர்வுக்கு வழி காட்டும்' என்ற தன்னம்பிக்கை விதையை ஆழமாக விதைத்த அப்துல் கலாம், செல்லும் இடமெல்லாம் மாணவர்களைசந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடத்தவறியது இல்லை. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கு வரும், வி.வி.ஐ.பி.,க்களை விட, மாணவர்கள், குழந்தைகளை நோக்கித் தான், அப்துல் கலாமின் பார்வை இருக்கும். அந்த அளவுக்கு, இளைய தலைமுறையினரை பெரிதும் நேசித்தார். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோரை தொடர்ந்து, ஜனாதிபதியாக பதவி வகித்த மூன்றாவது தமிழர் என்ற பெருமையும் கலாமுக்கு உண்டு. இவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையை கலகலப்பாக மாற்றி, அதில் உள்ள, 'முகல்' தோட்டத்தை விசேஷமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்தார்.சாதாரண மக்கள், எளிதில் அணுக முடியாத இரும்பு கோட்டையாக இருந்த ஜனாதிபதி மாளிகையை, ஏழை, எளிய மக்களின் தரிசனத்துக்காக திறந்து விட்ட பெருமைக்குரிய இதயம் படைத்தவர். திருக்குறள் மீது பற்று: நாட்டின் எந்த மூலையில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தாலும், கலாம் எழுதிய, 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகம் தான், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்றுமே பரிசாக அளிக்கப்படுகிறது. அணுசக்தி விஞ்ஞானியாக இருந்தாலும், தாய் மொழியான தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அதீத பற்று உடையவராக இருந்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், திருக்குறளை மேற்கோள் காட்டி பேச, அவர் தவறியது இல்லை. தன், பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், அனைவரது மனதையும் வசியம் செய்தவர். பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையில், தன் குடும்பத்தினரை சேர்க்காமல், எளிமையை பின்பற்றினார். எளிமையும், ஆடம்பரமின்மையுமே அப்துல் கலாமின் மற்றொரு அடையாளம்! 'இவர் போன்ற ஒரு தலைவர் நமக்கு கிடைக்க மாட்டாரா...'என, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஏங்க வைத்தவர். இதுவரை, 13 பேர், இந்திய ஜனாதிபதி நாற்காலியை அலங்கரித்திருந்தாலும், 'மக்கள் ஜனாதிபதி' என, அனைத்து தரப்பினராலும், ஏகோபித்த பாராட்டை பெற்றவர். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 84 வயதிலும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 'இந்தியா, 2020க்குள் வல்லரசாக வேண்டும்' என, அடிக்கடி கூறி வந்த கலாம், கடைசிவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தார். கண்ணீர் கடல்: எப்போதும், மாணவர்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கலாம், தன் கடைசி வினாடியையும் மாணவர்கள் மத்தியில், அவர்களுக்காகவே செலவிட்டு, தன் மூச்சுக்காற்றை, இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஊடுருவி, விண்ணில் கலந்து விட்டார்.ஜவகர்லால் நேருவுக்கு பின், காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமரி வரையுள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அழுத்தமாக இடம்பிடித்து, அவர்களின் பேரன்பை பெற்ற, 'அணு நாயகன்' என்ற மகத்தான மாமனிதரின் மரணம், நாட்டு மக்களை, கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. சோகத்தில் சொந்த ஊர்: கலாம் மறைவால், ராமேஸ்வரம் சோகத்தில் மூழ்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள, அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாப்தீன், பேரன் சலீம் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள், கூட்டம் கூட்டமாக, கலாம் வீட்டின் முன் குவிந்து, கண்ணீர் வடித்தனர். முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், தமிழ்த்தாய் அறக்கட்டளை நிர்வாகிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலாம் பேரன் சலீமிற்கு ஆறுதல் கூறி, இரங்கலை தெரிவித்தனர். 'ராமேஸ்வரத்தில் அடக்கம்': அப்துல் கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் பேரன் சலீம் கூறுகையில், ''நேற்று மாலை, 4:00 மணிக்குதான், தாத்தாவுடன் பேசினேன். ஷில்லாங்கில் குளிராக இருந்ததால், சுவாச பிரச்னை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான், அனைத்து மதத்தினரின் விருப்பம். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார் பதிவு செய்த நேரம்:2015-07-27 21:03:07 மேகாலயா: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம். பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையில் பிரதமரின் தலைமை அறிவியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். 1931 அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தார். பள்ளிப் படிப்புக்கு பின் தந்தைக்கு பத்திரிகை விநியோகப் பணி செய்தார். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார், திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளநிலை இயற்பியியல் பயின்றார் கலாம். 1960ல் DRDO வானூர்தி மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக சேர்ந்தார். ராணுவத்துக்கு சிறிய ரக ஹெலிகாப்ட்டர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். 1969ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்து வாகன திட்ட இயக்குனராக இருந்தார். கலாம் 20 ஆண்டு பணியாற்றிய SLV மற்றும் SLV-3 திட்டங்கள் வெற்றி பெற்றன. கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

 

அப்துல் கலாம் ஒரு பார்வை

மறைவுக்கு முன் காவலரை மனமார பாராட்டிய கலாம் Updated: July 28, 2015 10:58 IST | பிடிஐ கலாம் பாராட்டைப் பெற்ற காவலர் | படம்: சிறப்பு ஏற்பாடு மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம் தான் நிலைகுலைந்து சரியும் சில மணித் துளிகளுக்கு தனக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்கிய காவலரை அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து கிழக்கு காசி மலைப்பிரதேச எஸ்.பி. காக்ரங் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், அவருக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அப்துல் கலாம் அழைக்கிறார் என்றதும் முதலில் அந்த காவலர் அச்சம் கொண்டார். பின்னர், பாராட்டு கிடைத்தபோது அந்த காவலர் நெகிழ்ச்சியடைந்தார். கலாமின் சிறப்பே அவரது சிறிய விஷயங்களைக்கூட மனமார பாராட்டுவதே" என்றார்.