கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?

கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.
👉 தேங்காயை தரும் தென்னை மரம், மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும்.
👉 உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை குறிக்கிறது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
👉 இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை குறிக்கிறது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது.
👉 அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது.
👉 இறைவனின் சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளால் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயல் தான் தேங்காய் உடைப்பது.
👉 இதன் காரணமாகவே முதலில் தேங்காய் உடைத்து பிறகு இறைவனுக்கு பு+ஜை செய்கின்றனர்.
வெள்ளி, 14 அக்டோபர், 2016
Home »
» கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் ❓
0 கருத்துகள்:
கருத்துரையிடுக