Like us on Facebook

புதன், 1 நவம்பர், 2017

உடல் சூடு தணிய...

உடல் சூடு தணிய...

வாத உடம்புக்காரர்களை அதிகம் தாக்கு கின்ற ஒரு பிரச்சனை உடல் சூடு. இவர்கள் தன் உடம்பை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டால் உடல் சூடு தாக்கி அதனால் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்துவிடும். ஆகவே, நமது உடல் சமநிலையாக இருக்க எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றில் கட்டிகள், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடும்.
சித்த மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் இருக்கின்றன. நீங்களே உங்களது உடம்பிற்கு ஏற்ப மருத்துவ முறைகளை கையாண்டு வந்தால் உடலில் சூடு ஏற்படாமல் பாதுகாத்துக் ெகாள்ளலாம்.
1. காலிஃபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
2. முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.
3. நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும்.
4. முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
5. மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
6. பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
7. வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
8. புளிச்சக் கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.
9. கானாம் வாழை கீரையை எடுத்து அதே அளவு தூதுவளை இலையை சேர்த்து துவரம் பருப்புடன் கூட்டு வைத்து தினமும் பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
10. ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்தப் ெபாடியை
உபயோகித்துவர உடல் சூடு தணியும்.
11. ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டவும். காலை அரை டம்ளர், மாலை அரை டம்ளர் வீதம் 25 நாட்கள் குடித்துவர உடல் சூடு தணியும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக