நீங்கள் கர்ப்பமாக நினைக்கும் போது, அதற்கு வளமான நாட்கள் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக வளமான நாட்களானது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆவது நாளில் இருந்து, அதே சுழற்சியின் 19 ஆவது நாள் வரை இருக்கும்.
இந்த நாட்களில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். தற்போது நிறைய தம்பதிகளால் கருத்தரிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தங்களது வளமான நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்.
மேலும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த வளமான நாட்களானது வேறுபடும். மேலும் வளமான நாட்களின் போது பெண்கள் ஒருசில உணர்வுகளைப் பெறுவார்கள். இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஓவுலேசனை கவனியுங்கள்
ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பும், ஓவுலேசன் முடிந்து 2 நாட்கள் கழித்தும், உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். இருப்பினும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உங்களது ஓவுலேசன் காலத்தைத் தெரிந்து கொள்ள, முதலில் உங்களது மாதவிடாய் சுழற்சியை குறைந்தது 2-3 மாதங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஒரு மாதவிடாய் சுழற்சிக்கும் அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கும் இடையே உள்ள நாட்களை கணக்கிட வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு இருப்பது முறையான அல்லது முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளதா என்பதை அறிய முடியும்.
உடல் அடிப்பகுதி வெப்பநிலையை பரிசோதிக்கவும்
ஓவுலேசன் காலத்தில் பெண்களின் உடல் அடிப்பகுதி வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் உள்பதியவைத்தலுக்கு கருப்பையை தயாரித்து வருவதால், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் காரணமாக உடலின் அடிப்பகுதி வெப்பநிலை அதிகரிக்கும்.
உடலின் அடிப்பகுதி வெப்பநிலையை கண்காணிக்க, தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், தெர்மாமீட்டர் கொண்டு அடிப்பகுதி வெப்பநிலையை சோதியுங்கள். அப்படி சோதிக்கும் போது முதல் நாளை விட வெப்பநிலை குறைந்திருந்தால், அந்நாளில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
யோனி வெளியேற்றத்தை கவனியுங்கள்
உங்களுக்கு வளமான நாட்கள் இருக்கும் போது, யோனியில் இருந்து சற்று பிசுபிசுப்பான மற்றும் சற்று கெட்டியான சளி போன்று வெள்ளை திரவம் வெளிவரும். இந்நாளில் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவால் எளிதில் கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
இதர அறிகுறிகள்
ஓவுலேசன் காலத்தில் மனநிலையில் கூட மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக அடிவயிற்றில் ஒரு பக்கம் மட்டும் மிதமான வலியை உணர்வது, வெள்ளைப்படுதல், மார்பகங்கள் மென்மையாக இருப்பது போன்றவை. இந்த அறிகுறிகள் எல்லாமே உங்களது வளமான நாட்களைத் தான் குறிக்கிறது" - எந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக