எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை.
சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான். உண்மையில் இது மாதிரி வேறு இடங்களே இல்லையா அப்படி என்ன பிரமாதம் என்று கேட்கலாம். இதுபோன்று பல இடங்கள் இருப்பினும் இன்று முடிவு செய்து நாளை கிளம்பலாம் என்றால் அது மசினகுடிதான். ஆம். தற்போது இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான். நமக்கு தெரிந்ததெல்லாம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. ஆனால் இவ்வளவு அழகான இடத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க அந்த சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
மசினகுடி செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று - கோவா - ஊட்டி - குண்டல்பேட்டை நெடுஞ்சாலை. இது 36 கொண்டை ஊசிவளைவுகளைக் கொண்டது. முதுமலையிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மசினகுடி.மசினகுடியும் முதுமலை காடுகளின் ஒருபகுதிதான். இந்த இடம் பறவை பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.7நீங்கள் செல்லும் பயணத்தின் நேர அளவுகளைப் பொறுத்து, நீங்கள் சென்றடையும் நேரம் ஒருவேளை இரவாக அமைந்தால் கவலைப் படவேண்டாம். இங்கு அருகிலேயே தங்கும் விடுதிகள் தரமானதாக அமைந்துள்ளன.
காலை விடிந்ததும் முதல் வேளையாக மசினகுடியை சுற்றிப் பார்க்கலாம். மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
தொடர் ஆக்கிரமிப்பால் பசுமை மறைந்து கான்கிரீட் காடாக மாறி வரும் ஊட்டி வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த மசினகுடிக்கு செல்லவேண்டும்.மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்
மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை 6:30 - 8.30 வரையும், மாலை 3 - 6 வரையும் சபாரி செய்யலாம். இந்த சபாரி பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பலவகையான பறவைகள் போன்றவற்றை கண்டு மகிழலாம். இங்கே ஜீப்,கார் போன்ற வாகனங்களில் செல்வதை காட்டிலும் யானையின் மீது அமர்ந்து வன உயிரினங்களை கண்டு மகிழலாம்.
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்" - இயற்கையை நேசிப்பவரா நீங்கள்?...மசின குடியை மிஸ் பண்ணிடாதீங்க!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக