Like us on Facebook

திங்கள், 2 அக்டோபர், 2017

தாஜ்மஹால் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கம்

               

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் சுற்றுலாத் தலம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாஜ்மஹால். இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்பதால் முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து உத்திரப்பிரதேச அரசு தாஜ்மஹாலை நீக்கியுள்ளது. இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி தாஜ்மஹால் கட்டப்படவில்லை என உத்திரப்பிரதேச முதல்வர் விளக்கமளித்துள்ளார். எனவே சுற்றுலா மைங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிவிட்டு, புதுப்பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக