Like us on Facebook

திங்கள், 5 மார்ச், 2018

எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சரிவிகித டயட் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் பிரச்சனைகளின்றி இருக்கும். ஆனால் நம்மில் பலர் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிடுகின்றனர். இப்படி தவறான நேரத்தில் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு தான் விளையும் என்பது தெரியுமா?
ஆம், குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் இதர வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் நமக்கு எந்த பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியாது. முக்கியமாக அன்றாடம் நாம் சாப்பிடும் பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது என்று தெரியாமல் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறோம்.
உதாரணமாக, வாழைப்பழம், பால், தயிர் போன்ற பொதுவான உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா? இந்த உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும். நாம் பொதுவாக சாப்பிடும் சில உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நெஞ்செரிச்சலை சரிசெய்ய உதவும் ஆன்டாசிட்டு பண்புகள் அதிகம் உள்ளது. வாழைப்பழத்தை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், உடலின் ஆற்றல் சீராக பராமரிக்கப்படும். அதே வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதன் விளைவாக சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எப்போதும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
தயிர்
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மென்மையாக நடைபெறுவதோடு, குடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது சூட்டைக் கிளப்பிவிடுவதோடு, அசிடிட்டியை ஏற்படுத்துவதோடு, இதர செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும். அதோடு, இது சுவாச பாதைகளைப் பாதித்து, சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படவும் செய்யும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் இந்த பானத்தை சரியான நேரத்தில் குடித்தால் தான், இதன் முழு பலனையும் பெற முடியும். க்ரீன் டீயை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடல் வறட்சி மற்றும் அசிடிட்டியை உண்டாக்கிவிடும். ஏனெனில் இதில் காப்ஃபைன் உள்ளது. எனவே இதனை வெறும் வயிற்றில் குடிப்பதை விட, பகல் நேரங்களில் குடிப்பதே சிறந்தது.
சாதம்
ஒருவர் சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அனைத்து ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் இதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமலும் செய்யும். மேலும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிட்டால், அது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே சாதத்தை பகலில் மட்டும் சாப்பிடுங்கள்.
பால்
பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இத்தகைய பாலை பகல் வேளையில் குடித்தால், அது சோம்பேறித்தனமாக இருக்க செய்யும். ஏனெனில் இது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதே பாலை இரவு நேரத்தில் ஒருவர் குடித்தால், உடல் முழுமையாக ரிலாக்ஸ் ஆவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சிறப்பான முறையில் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.
ஆப்பிள்
நம் அனைவருக்குமே ஆப்பிள் ஏராளமான முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் நிறைந்த மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரித்து, அசிடிட்டியை உண்டாக்கும். எனவே ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக நடைபெறும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய உட்பொருட்களைக் கொண்டது மற்றும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும். டார்க் சாக்லேட்டில் சர்க்கரை மிகவும் குறைவு மற்றும் கொக்கோ பொருள் அதிகம். இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், மனநிலை சிறப்பாகி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே டார்க் சாக்லேட்டை இரவு நேரத்தில் சிறிது சாப்பிடுங்கள்.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் ஆல்கஹால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரோனரி இதய நோய்களைத் தடுக்கும். இத்தகைய ரெட் ஒயினை இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் அல்லது மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்தால், அது உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, அது ஒருவரை சுறுசுறுப்பாக்கும். ரெட் ஒயினை எப்போதும் பகல் வேளையில் மட்டும் குடிக்காதீர்கள்.
காபி
பலருக்கும் இரவு நேரத்தில் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களுள் ஒன்று. யார் ஒருவர் காபியை இரவு நேரத்தில் குடிக்கிறார்களோ, அவர்களது செரிமான மண்டலத்தில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் இதில் உள்ள காப்ஃபைன் ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். எனவே இந்த காபியை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதனை பகல் நேரத்தில் குடித்தால், அது மிகவும் சுறுசுறுப்பானவர்களாக ஆக்குவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதத்தையும் அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். ஆனால், இந்த ஆரஞ்சு ஜூஸை மட்டும் இரவு நேரத்தில் குடிக்காதீர்கள். ஏனெனில் இது வயிற்றில் அமில சுரப்பின் அளவை அதிகரித்து அசிடிட்டியை உண்டாக்கிவிடும்.
சர்க்கரை
சர்க்கரை கலந்த பானங்களை பகல் வேளையில் குடிப்பதால், அது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆனால் இந்த சர்க்கரை கலந்த பானங்களை இரவு நேரத்தில் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்துவிடும். இதற்கு இரவு நேரத்தில் உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
read andwin cash
Get Rs50 on download
Install Now
தூங்கும் போது உங்கள் காதில் பூண்டு வைத்து படுத்தால் இது நடக்குமாம்.read andwin cash
ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா?...read andwin cash
உங்களுக்கு வாயில் சிறிய அளவு புண் வந்தாலே புற்றுநோய் என்று பயம் கொள்கிறீர்களாread andwin cash
எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?... ஆபத்தை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்கread andwin cash
இரண்டு கணவனுடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி..திகைக்கவைக்கும் காரணம்!read andwin cash
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்.. இந்த கொடுமை எங்கே தெரியுமா?read andwin cash
விருமாண்டி நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்read andwin cash
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் உள்ளேread andwin cash
முதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த ஷங்கர்read andwin cash
இந்த வார ராசிபலன் மார்ச் 5 முதல் 11 வரை 12 ராசிகளுக்கும்read andwin cash
Get Rs50 on download
Install Now

0 கருத்துகள்:

கருத்துரையிடுக