Like us on Facebook

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஹோமங்களின் வகைகள்

ஹோமங்களின் வகைகள்

  ஹோமங்கள் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பரிகாரங்களுக்காக நடத்தப்படுகிறது. பல வகையான ஹோமங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும் மகா கணபதி ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட, புத்திர பாக்கியம் கிட்ட சந்தான கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலக சண்டி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி, சு+ன்யம் நீங்கவும், வெற்றி பெறவும் சுதர்ஸன ஹோமம் செய்தால் நல்லது.

🌟 நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி, மகிழ்ச்சி பெற நவகிரக ஹோமம் செய்தால் நல்லது.

🌟 ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாக ருத்ர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 குபேர ஹோமம் - செல்வ வளம் தர குபேர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க தில ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்க, ப்ரத்யங்கரா ஹோமம் செய்தால் நல்லது நடக்கும்.

🌟 ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபாரம் லாபம் பெற, ஸ்வர்ண கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 துர்க்க ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல துர்க்கா ஹோமம் செய்தால் நன்மை கிட்டும்.

🌟 வித்யா கணபதி ஹோமம் - கல்வியில் சிறக்க வித்யா கணபதி ஹோமம் செய்தால் பலன் கிட்டும்.

🌟 மோகன கணபதி ஹோமம் - திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்க மோகன கணபதி ஹோமம் செய்தால் நன்மை பயக்கும்.

🌟 தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம் காண தன்வந்திரி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூட, சுயம்வர கலா ஹோமம் செய்தால் விரைவில் நல்ல பலன் கிட்டும்.

🌟 ஹோமங்களின் பலன் அறிந்து ஹோமங்களை செய்யவும், வீட்டில் 16 வகையான செல்வங்கள் நிலைக்கவும் இந்த ஹோமங்கள் உதவுகின்றன.

பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் :

பெண் நட்சத்திரம் : ரோகிணி

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் 1, 2, புனர்பு+சம் 4, உத்திரம் 1, பு+ரட்டாதி, பரணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

பெண் நட்சத்திரம் : மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் : திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக