வெள்ளி, 25 செப்டம்பர், 2015
Home »
» பெரம்பலூர் செந்தில்
பெரம்பலூர் செந்தில்
வெளிநாட்டு வேலையைத் துறந்து விவசாயத்தில் கலக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!வருடம் ரூ.60 லட்சம் வருமானம் வரும் வேலையை உதறிவிட்டு, விவசாயம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தை அடுத்துள்ள தேனூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி செந்தில்.தேனூர் கிராமம்... சுத்தமான காற்றுடன் உண்மையான பாசம் காட்டும் மனிதர்களின் வாழ்விடம். இந்த ஊருக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறார் செந்தில்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வ செழிப்பில் மயங்கி, அந்த நாடுகளில் வேலை செய்து செல்வம் சேர்க்க ஆசைப்படாதவர்கள் இந்தியாவில் அரிது. இந்த நிலையில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, அமெரிக்காவில் வருடம் 60 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்து தன் மக்களின் வாழ்வை மாற்றி ஆச்சரியம் அளித்துள்ளார் செந்தில்.இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை நம்பியே வாழ்கையை நடத்துபவர்கள் தேனூர் மக்கள். ஆனால் நகர மக்களின் பேராசையால் நரகமாக மாறியது தேனூர் கிராமம். பற்றாக்குறையான பருவமழையால் வறண்டுவிட்ட விவசாய நிலம், இருக்கும் கொஞ்ச நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுவது ஆகிய காரணத்தால் மனம் ஒடிந்த பாரம்பரிய விவசாயிகள், தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இந்த நிலையில்தான் 'பயிர்' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, செந்திலும் அவரின் மனைவி பிரீத்தியும் நடத்தி வருகிறார்கள். பிரீத்தி ஹோமியோபதி மருத்துவர். தேனூர் கிராமத்துக்கு 'பயிர்' மூலம் செய்த உதவிகள் ஏராளம். அவ்வூர் மக்களின் கல்வி, ஆரோக்கியத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ நிறுவனம்தான் 'பயிர்'.இந்த அமைப்பு மூலம் தேனூர் மக்களுக்கு எம்சிஏ பட்டதாரிகளைக் கொண்டு கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது கூடுதல் விசேஷம். போதிய உணவு இல்லாத காரணத்தால் ஏழைக் குழந்தைகள் பலர் நோய்வாய்ப்பட்டனர். அதனால் அவர்களுக்கு சத்து நிறைந்த நிலக்கடலையும், தினையும் வழங்குகிறது 'பயிர்'.சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 40 சதவிகித குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம், தமிழ்நாடு அரசு தினம் 500 கலோரி சத்துடைய நிலக்கடலையும் தினையும் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஏழைக் குடும்ப குழந்தைகளுக்கு மிகக்குறைந்த விலையில் பால் வழங்கி வருகிறது பயிர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பரப்பும் வகையில் 'பயிர்' அமைப்பு உண்டாக்கிய விழிப்புணர்வால், தேனூரில் 6.77 ஏக்கர் பரப்பு அளவு கொண்ட நிலத்தில் நிலக்கடலை, உளுந்து, நெல் மற்றும் எள் பயிரிடப்படுகிறது. மேலும் வேப்பங்காயை உரமாக மாற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள் தேனூர் வாசிகள். விவசாயத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறது 'பயிர்' என்றால் மிகையில்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக