Like us on Facebook

சனி, 11 மார்ச், 2017

உடலுக்கு குளிர்ச்சியான வெந்தய குழம்பு


உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இத்தகைய வெந்தயக் குழம்பு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1
புளி - 1
எலுமிச்சை - 1 சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
எண்ணெய் -1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் புளியை நீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு, புளிக்கரைசல் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் சிறு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான வெந்தய குழம்பு ரெடி!" - உடலுக்கு குளிர்ச்சியான வெந்தய குழம்பு


0 கருத்துகள்:

கருத்துரையிடுக