"வங்கி, இ-மெயில் தகவல்கள் திருட்டு : சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியா
புதுடெல்லி : சைபர் தாக்குதலில் உலக அளவில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது என தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இ-மெயில், வங்கி கணக்கு, தனிப்பட்ட விவரங்கள் இதன் மூலம் திருடப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் இ-மெயில் பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்கள் அதிக அளவில் திருடு போயுள்ளன. சீனாவில் 2015ம் ஆண்டு சைபர் தாக்குதல் உலக அளவுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதமாக இருந்தது. இதை கடந்த ஆண்டில் 10 சதவீதத்துக்குள் குறைத்து கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் 2015ம் ஆண்டில் சைபர் தாக்குதல் 3.4 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு சைபர் தாக்குதலின்படி, அமெரிக்கா, சீனா ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இவை இரண்டிலும் சேர்ந்து சைபர் தாக்குதல் 34 சதவீதமாக உள்ளது.இதை தொடர்ந்து பிரேசில் உள்ளது.4வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக சைபர் தாக்குதல் சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சதவீதம் குறைவு என்றாலும், முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் தாக்குதல் அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சைபர் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்த நிறுவனம் தனது அறிக்கையில்,கடந்த 8 ஆண்டுகளில் 700 கோடிக்குமேல் தகவல் திருட்டுகள் நடந்துள்ளன. 2015ல் 56.3 கோடி தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இது 2016ல் இரண்டு மடங்குக்கு மேல்உயர்ந்துள்ளது. 110 கோடி தகவல்கள் திருடுபோயுள்ளன என்று தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதலை தடுக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகவல்கள் திருடுபோகாமல் தொழில்நுட்ப ரீதியாக தடுப்பு அரண்களை பலப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்." - வங்கி, இ-மெயில் தகவல்கள் திருட்டு : சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியா
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
Home »
» வங்கி இ-மெயில் தகவல்கள் திருட்டு சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியா
வங்கி இ-மெயில் தகவல்கள் திருட்டு சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியா
இருப்பிடம்:
Adavathur West, India
0 கருத்துகள்:
கருத்துரையிடுக