"டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள்,
இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பப்பாளியின் நன்மைகள் குறித்து காணலாம். பப்பாளியின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியது. இதில், விட்டமின் ஏ, பி, சி, கே, இ சத்துக்கள் உள்ளன. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இதயத்துக்கு நலம் தரக்கூடியது. பப்பாளியில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. மலக்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது. பப்பாளி இலைகளை பயன்படுத்தி காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி இலை, மிளகு, சீரகம், நெல்லிவற்றல்.செய்முறை: பப்பாளி இலைகளின் காம்புகளை நீக்கிவிட்டு இலைகளை மட்டும் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது நெல்லிவற்றல் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை மாலை 3 நாட்கள் குடித்துவர வைரஸ் காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் உண்டாகும் மூட்டுவலி, உடல்வலி சரியாகும். பப்பாளி இலை உயிர்காக்கும் மருந்தாக பயன் தருகிறது. வருகிற காலம், மழைக்காலம் என்பதால் காய்ச்சல் வரக்கூடும். இந்நிலையில், டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு காய்ச்சலை பப்பாளி இலை குணப்படுத்தும் மருந்தாகிறது. டெங்கு காய்ச்சல் வருகிறபோது ரத்த வட்டுக்களின் குறைபாடால் ஆபத்து ஏற்படும். இதற்கு பப்பாளி இலை தேனீர் மருந்தாகிறது. இது காய்ச்சலை குணப்படுத்தும். ரத்த வட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும். இரும்பு சத்து அதிகமாகும். உயிருக்கு பாதுகாப்பான மருந்தாக பப்பாளி விளங்குகிறது. பப்பாளி இலை சாறை பயன்படுத்தி ரத்த வட்ட அணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி இலை, மஞ்சள் பொடி, தேன். செய்முறை: பப்பாளி இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டுவர ரத்த வட்ட அணுக்கள் அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல் வீக்கம் சரியாகும். பன்றி காய்ச்சல், சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் குணமாகும். பப்பாளி இலைகள் நோய் கிருமிகளை அழிக்க கூடியது. பப்பாளி பழத்தின் பசை 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 4 வாரம் சாப்பிட்டுவர வயிற்றில் உள்ள பூச்சிகள், வெளியேறும். உடலுக்கு பொலிவு தரும் மருந்தாகிறது. புறவூதா கதிர்களால் ஏற்படும் கருமையை போக்குகிறது. தலைமுடிக்கு செழுமையை தருகிறது. குடல், ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. அஜீரணத்தை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் திரிகடுக சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து, காலையில் சுடுநீர் அல்லது தேனில் குழைத்து சாப்பிடும்போது பசியை தூண்டும். சளி, இருமலை தணிக்கும். அஜீரணம் சரியாகும். மூலக்கதை படிக்க" - டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக