Like us on Facebook

சனி, 12 ஆகஸ்ட், 2017

உங்களுக்கு தெரியுமா இளநீர்

"உங்களுக்கு தெரியுமா? இளநீர் ஒரு நல்ல தீக்காய நிவாரணி… தென்னையானது 56 சதவீதம் இளநீருக்காகவும், 44 சதவீதம் தேங்காய் எண்ணை மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா உஷ்ணம் மிகுந்த நாடாகும். அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முதன்மை இடம் வகிக்கின்ற இளநீர். நோய்களை தடுக்கும் இளநீர் இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது. இவ்வாறு பலவகைகளில் பயன்படும் தென்னையை நடும்போது இளநீருக்காக மட்டும் உள்ள தென்னை மரங்களை மட்டும் சாகுபடி செய்யாமல், இளநீர் மற்றும் தேங்காய்க்கு பயன்படும் திருவையாறு-2 என்ற ரக தென்னம்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் தென்னை விவசாயிகள் நல்ல இலாபம் பெறலாம். கோடைகால வியாதிகளை தடுக்கக்கூடிய இளநீரை நாம் பருகி நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். நச்சு நீக்கி நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது. தீக்காய நிவாரணி தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது. எடை இழப்பு இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது." - உங்களுக்கு தெரியுமா? இளநீர் ஒரு நல்ல தீக்காய நிவாரணி…

0 கருத்துகள்:

கருத்துரையிடுக