Like us on Facebook

திங்கள், 5 டிசம்பர், 2016

3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்

3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம்
6 Dec. 2016 06:27


சென்னை, டிச.06 (டி.என்.எஸ்) தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றார்.
கடந்த 72 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாக அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து, நேற்று காலை அதிமுக எம்.எல்.ஏ-க்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பார், என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்து. இதையடுத்து முதல்வரின் உடல் சென்னை போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, நேற்று இரவு 1.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசகர் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள்.


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக