முருகனின் வேறு கோலங்கள்!

🌟 “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்;. தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள், முருக வழிபாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.
🌟 வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! முருகன் இருக்க துன்பமில்லை! முருகன் என்று சொன்னால் நினைவுக்கு வருவது மயிலும், வேலும் தான். இந்த கோலம் தவிர முருகனுக்கு வேறு சில கோலங்களும் உள்ளது அதைப் பற்றிப் பார்ப்போம்.
🌀 திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், மூல ஸ்தானத்தில் முருகன் வில்லேந்தியபடி வள்ளி தெய்வானை உடனிருக்க அருள்கிறார்.
🌀 ஆறுமுகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனியே மயில் மீது காட்சி தரும் திருத்தலம் திருச்சி அருகே உள்ள திண்ணியம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
🌀 குடந்தை அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் தூண் சிற்பமாக, வேல் ஏந்திய முருகன் மயில் மீது கால் வைத்து நிற்கிறார்.
🌀 சென்னிமலை கோவிலில் குடிக்கொண்டிருக்கும் 'அக்னி ஜாத சுப்பிரமணியர்" இரண்டு தலைகளுடனும், 'சௌரபேய சுப்பிரமணியர்" நான்கு தலைகளுடனும் காட்சி அளிக்கிறார்.
🌀 மதுராந்தகம் பக்கமுள்ள குமார வாடி தலத்திலுள்ள கோவிலில், முருகப் பெருமான் யோக நிலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
🌀 பு+ம்புகார் அருகில் உள்ள சாயா வனம் எனும் தேவாரப் பாடல் பெற்ற பதியில், மூன்றடி உயரத்தில் வில் ஏந்திய முருகன் சிலை உள்ளது.
🌀 மலையைக் குடைந்து வடிக்கப் பெற்ற முருக வேலையும், தேவ குஞ்சரியையும் திருப்பரங்குன்றத்தில் தரிசிக்கலாம்.
🌀 கர்நாடகத்தில் உள்ள 'சுப்ரமணியர்" திருத்தலத்தில் முருகன் புற்று வடிவமாய் காட்சியளிக்கிறார்.
🌀 கரூர் அருகே உள்ள வெண்ணெய் மலை எனும் தலத்தில் வேல், மயில், வள்ளி-தெய்வானை இல்லாமல் தனியாகக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்.
🌀 மூன்று தலைகளையும், ஆறு கரங்களையும் உடைய முருகனை ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிப்பாளையத்தில் காணலாம்.
🌀 திருச்செந்தூரில் திருவிழா நாட்களில் முருகப் பெருமான், வில்லும் அம்பும், வேலும் வஜ்ராயுதமும் நான்கு கரங்களில் ஏந்திய வண்ணம் வீதி உலா வருகிறார். சங்கு சக்கர முருகன் தனது மாமன் திருமாலைப் போலவே, வலக்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் தாங்கியவராக ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்துள்ள காட்சி வேறெங்கும் காணமுடியாத அபு+ர்வக் காட்சியாகும்.
ஆன்மீக தகவல்கள் :
🌠 திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பு+சிக்கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.
🌠 அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பு+சிக்கொள்ள கூடாது.
🌠 பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.
புதன், 9 நவம்பர், 2016
Home »
» முருகனின் வேறு கோலங்கள்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக