செவ்வாய், 28 ஜூலை, 2015
Home »
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார் பதிவு செய்த நேரம்:2015-07-27 21:03:07 மேகாலயா: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம். பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையில் பிரதமரின் தலைமை அறிவியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். 1931 அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தார். பள்ளிப் படிப்புக்கு பின் தந்தைக்கு பத்திரிகை விநியோகப் பணி செய்தார். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார், திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளநிலை இயற்பியியல் பயின்றார் கலாம். 1960ல் DRDO வானூர்தி மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக சேர்ந்தார். ராணுவத்துக்கு சிறிய ரக ஹெலிகாப்ட்டர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். 1969ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்து வாகன திட்ட இயக்குனராக இருந்தார். கலாம் 20 ஆண்டு பணியாற்றிய SLV மற்றும் SLV-3 திட்டங்கள் வெற்றி பெற்றன. கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
-
இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச...
Blogger இயக்குவது.
Recent Posts
Translate
எனது வலைப்பதிவு பட்டியல்
Advertisement
பின்பற்றுபவர்கள்
லேபிள்கள்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2017
(118)
- ► செப்டம்பர் (26)
-
▼
2015
(8)
- ► செப்டம்பர் (4)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக