நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
சனி பகவான்
➽ சனிக்கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சனி பகவானின் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆர்த்தி எடுத்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.
சூரிய பகவான்
➽ ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம், சிவப்பு மணி, செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சூரியக் கிரக தோஷம் நீங்கும்.
ராகு பகவான்
➽ ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப்பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து, ராகு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் ராகுக் கிரக தோஷம் நீங்கும்.
கேது பகவான்
➽ ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை, வைடூர்ய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, கேது மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் கேதுக் கிரக தோஷம் நீங்கும்.
சந்திர பகவான்
➽ திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், முத்துமாலை, வெள்ளை அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சந்திர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.
அங்காரக பகவான்
➽ செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம், பவளம், சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து, அங்காரக மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.
புதன் பகவான்
➽ புதன்கிழமையில் அபிஷேகம் செய்து, பச்சை வஸ்திரம், மரகமணி, வெண்தாமரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் புதன் கிரக தோஷம் நீங்கும்.
குரு பகவான்
➽ வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் குருக் கிரக தோஷம் நீங்கும்.
சுக்கிர பகவான்
➽ வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண்தாமரை மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆரத்தி எடுத்தால் சுக்கிரக் கிரக தோஷம் நீங்கும்.
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
Home »
» நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக